செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

 
dead body

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், செங்கல்பட்டிலும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பேருக்கரணை கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் போலியான சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களீல் சின்னத்தம்பி, வசந்தா, வெண்ணியப்பன், சந்திரா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் அஞ்சலை, அம்மாவாசை மற்றும் மாரியப்பன் ஆகிய மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில், செங்கல்பட்டில் போலி மது அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் மாரியப்பன் (65) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி இருக்கலாம் கூறப்படுகிறது.