ஸ்ரீவைகுண்டம் பாலியல் வழக்கில் கைது நடந்தும் கொலைமிரட்டல்? - எம்.எல்.ஏ. மீது புதிய குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்திகள் வெளியானது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகி பாலா, ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலியல் வன்கொடுமை குறித்த புகார் தொடர்பாக பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், “நான் கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். எனக்கு எம்.எல்.ஏ.தரப்பிடமிருந்து கொலை மிரட்ட்ல் வருகிறது. வீட்டை காலி செய்ய சொல்லி டார்ச்சர் செய்கின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வேண்டும். என் மீது சிறு கீரல் நடந்தாலும் அதற்கு எம்.எல்.ஏவே பொறுப்பு. காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என தெரியவில்லை? பலமுறை மனு கொடுத்தும், புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவரது ஆதரவாளர்கள்சமூகவலைதளங்களில் என்னை மிகவும் அசிங்கமாக, கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்துறாங்க.. கட்சிக்காக இரவு 2 மணி வரை போஸ்டர் ஒட்டும்போதெல்லாம் நான் பணத்துக்கு அலைந்தவளாக தெரியவில்லையா? விஜய் அண்ணா எனக்கு நீதி வேண்டும். உரிய பாதுகாப்பு வேண்டும்” எனக் கூறினார்.

