தவெக குறித்து விமர்சனம் செய்த பெண்களுக்கு கொலைமிரட்டல்
மார்பிங் செய்து தனித்தகவல்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தவெகவினர் கொலை மிரட்டல் விடுவதாக 4 பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் குறித்து விமர்சனம் செய்த காரணத்திற்காக தங்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து, தனித்தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தவெகவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக 4 பெண்கள் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For calling out #TVK for their supporter’s online harassment in a Twitter Space - specifically for morphing a Twitter user’s photos in explicit and objectionable videos, as a means to intimidate that user- we are facing the following -
— Homskyra (@homskyra) July 7, 2025
1. False accusations (on me) of abusing… pic.twitter.com/ixmajru4DF
இதுதொடர்பாக Homskyra என்ற ட்விட்டர் பக்கத்தில் தவெக நிர்வாகிகள், மூன்று நாட்களுக்கும் மேலாக இடைவிடாத ஆன்லைன் மிரட்டல், தனக்கு மட்டுமல்லாது தனது நண்பர்களுக்கும் எனக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தமிழக காவல்துறை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


