மனைவிக்கு கொலை மிரட்டல்- தவெக பொருளாளர் மீது பகீர் புகார்!

 
மனைவிக்கு கொலை மிரட்டல்- தவெக பொருளாளர் மீது பகீர் புகார்!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக பொருளாளர் மீது புகார் எழுந்துள்ளது.

தவெக பொருளாளரும், மயிலாப்பூர் வேட்பாளருமான வெங்கட்ரமணன் 2012ல் மீனாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய வெங்கட்ரமணனுக்கு சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. ஆனால் மீனாட்சியுடன் வாழாமல் குழந்தையை மட்டும் தன்னுடன் வைத்துள்ளார் வெங்கட்ரமணன்

இந்நிலையில், தன் குழந்தையை காண்பிக்க மறுக்கிறார். காட்டச் சொல்லி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீனாட்சி புகார் கொடுத்துள்ளார். தவெக தலைவர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கும் நிலையில், தவெக பொருளாளர் மீதும் அவரது மனைவி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.