“விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதானவருக்கு மரண தண்டனை வழஙக வேண்டும்” - மாணவியின் தந்தை
குற்றவாளிக்கு உயிர் போகும் வரை தண்டனை தான் வழங்க வேண்டும். மரண தண்டனை வழங்க வேண்டும். இனிமேல் வெளியே வரக்கூடாது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என விளாத்திகுளம் மாணவியின் தந்தை பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை சுப்புராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 10 ந்தேதி எனது காணாமல் போனார். தற்போது குற்றவாளி கண்டுபிடித்து விட்டதாக கூறுகின்றனர். இனிமேல் இது போன்ற நடக்க கூடாது. எல்லா காவல்துறை அதிகாரிகளும்உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கடைசியாக இருக்கட்டும். குற்றவாளிக்கு உயிர் போகும் தண்டனை தான் வழங்க வேண்டும். இனிமேல் வெளியே வரக்கூடாது. இனிது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. நாளை எனது மகள் உடனே வாங்க நானும் எங்களது கிராமத்தினரும் முடிவு செய்துள்ளோம்” என்றார்.
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 நாட்களுக்குப் பிறகு சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன், கடந்த 2020-ம் ஆண்டு எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் 2024 ஆகஸ்ட் மாதம் ஆயுள் தண்டனை பெற்றவர். அத்தகைய கொடூரக் குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது எப்படி? ஜாமீனில் வெளிவந்த ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளியைக் காவல்துறை ஏன் தொடர்ந்து கண்காணிக்கவில்லை? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

