மாரிமுத்து மரணம் - விஜயகாந்த், ஓ.பி.ரவீந்திரநாத் இரங்கல்

 
rn
'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.  சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
tn

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருடைய இழப்பு  திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் தேனி தொகுதி மக்களவை உறுப்பினர்  ஓ.பி.ரவீந்தரநாத் , தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தை சேர்ந்த தமிழ் திரையுலகின்‌ இயக்குனரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான "எதிர்நீச்சல் நாயகன்" திரு.ஜி.மாரிமுத்து மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். #RIP என்று பதிவிட்டுள்ளார்.