ட்ரெண்டிங் மாடு மரணம்..! சோகம்..!

 
1 1

ராஜஸ்தான் புஷ்கரில் ஒவ்வொரு ஆண்டும் புஷ்கர் விலங்கு கண்காட்சி நடைபெறும். அந்தக் கண்காட்சியில் நாடு முழுக்க இருந்து கொண்டு வரப்படும் விலங்குகள் காட்சிப்படுத்தப்படும். இதற்கிடையே அந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புஷ்கர் விலங்கு கண்காட்சி நடைபெறும். அந்தக் கண்காட்சியில் நாடு முழுக்க இருந்து கொண்டு வரப்படும் விலங்குகள் காட்சிப்படுத்தப்படும். இதற்கிடையே அந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அப்போதுதான் அதன் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. அந்த எருமையைக் காப்பாற்றத் தீவிரச் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், எருமையின் அதிக உடல் எடை மற்றும் மோசமடைந்திருந்த உடல்நிலை காரணமாக அதைக் காப்பாற்ற முடியவில்லை.

இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக அந்த எருமையின் உரிமையாளர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இது தொடர்பாக நடிகை சினேகா உல்லால், "அதிக ஹார்மோன்கள், அதிக ஆண்டிபயாடிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களை செலுத்துகிறார்கள். முழுக்க முழுக்க இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டு, பிறகு அதுதான் இயற்கையானது என்று சொல்கிறார்கள். அருவருப்பான மனிதர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.