மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!!

 
Q

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இது ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.அதாவது அகவிலைப்படி (DA) 60%-லிருந்து 63%-ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் (DR) 3% உயர்த்தப்பட்டுள்ளது.  இதன்மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.