"அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களுக்கு... மன்னிச்சுக்கோங்க!" – எலான் மஸ்க் போட்ட அதிரடி போஸ்ட்!

 
1

இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையான 'ஸ்டார்லிங்க்' சேவையை கொண்டு வர எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. சில பணக்காரர்கள் தான் இந்தியாவில் ஸ்டார்லிங்க் துவங்குவதை முடக்குவதாக, சில தினங்களுக்கு முன் எலான் மஸ்க் பெயர் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அம்பானி தான் அவர் என குறிப்பிடும் வகையில், தற்போது எலான் மஸ்க் சமூக வலைதளங்களில், 'பிரதமர் அம்பானி அவர்களே! என குறிப்பிட்டு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களுக்கு, நீங்கள்தான் இந்தியாவின் நிஜமான முதலாளி என்பதை உணராமல் போனதற்கு என் பணிவான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். ​இந்திய மக்கள் மத்தியில் உங்களது ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவே நீங்கள் விரும்புவீர்கள் என்பது புரிகிறது. இருப்பினும், எங்களது ஸ்டார்லிங்க்குடன் போட்டியிட நீங்கள் அனுமதிப்பீர்களா.​இந்தியாவில் இன்டர்நெட் வசதி இல்லாத கிராமப்புறங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, சிறு வணிகர்கள் உலக சந்தையை அணுக முடிவதில்லை. ஸ்டார்லிங்க் சேவை வந்தால் அவர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் மேம்படும். ​நன்றி. ​இவ்வாறு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.