3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!
3 ஆண்டுகள் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியின் கீழ் இயக்கும் அரசு சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், ஜூலை 25 வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2025 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளார்.


