சேகர்பாபுவை திணற வைத்த வினோஜ் பி செல்வத்தின் அடுத்த டார்கெட் தயாநிதி மாறன்..! சவாலுக்கு ரெடியா ..?
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறார்.
யார் இந்த வினோஜ் பி செல்வம்
நெல்லை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வினோஜ் பி செல்வம், வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் BA BL (Honors) படித்து முடித்துள்ளார். இவர், கடந்த 2007ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2007ம் இவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டபோது தமிழக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (தென் சென்னை) மாவட்ட பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு ஜனவரி 2010 முதல் ஜூலை 2012 வரை சென்னை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். அதன் பிறகு ஜூலை 2012 முதல் ஜூலை 2015 வரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில செயலாளராக பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு ஜூலை 2015 முதல் ஜூன் 2016 வரை வரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த அவர், கடந்த 2016 ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகின்றார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெறும் MLA தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார் வினோஜ் பி செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம், திமுக வேட்பாளர் சேகர் பாபுவிற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன் விளைவு, வாக்கு எண்ணிக்கையின்போது முதல் மூன்று ரவுண்டுகளில் சேகர்பாபுவையே திணறடித்தார். அவரை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்று திமுகவினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழக அளவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாஜக சார்பாக இவர் எடுத்து நடத்தி வருகின்றார். பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் சார்பாக தமிழகம் முழுவதும் தடகளம் சம்பந்தமான பல போட்டிகளை இவர் நடத்தியுள்ளார். ஐயாயிரம் பேர் பங்கேற்ற சிறப்பு கண் முகாமை தலைமையேற்று நடத்தி அதில் ஆயிரம் ஏழை மக்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கி உள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் 80க்கும் அதிகமான மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், புத்தகம் உள்ளிட்ட வகையில் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை உதவிகளாக செய்திருக்கிறார் வினோத் பி செல்வம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரத்த முகாம்கள் நடத்தி சுமார் 9500 யூனிட்டுக்களுக்கும் மேலான ரத்த தேவைகளை அவர் பூர்த்தி செய்துள்ளார்.
அதேபோல வடசென்னை பகுதியில் விதவை மற்றும் ஏழை எளிய தாய்மார்களுக்கு 500 தையல் மிஷின்களை வழங்கியுள்ளார் அவர். குடிசை பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் நோய்களை நீக்க, 300க்கும் மேற்பட்ட கழிவறைகளை இவர் கட்டிக் கொடுத்திருக்கிறார்.மக்களுக்கு இவர் செய்த நல திட்டங்களுக்கு பலனாக, மத்திய சென்னையில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது பாஜக தலைமை.
வினோஜ் பி செல்வம், தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்டு வென்று காட்டுவேன் என்று சொல்லியே பாஜக தேசிய தலைமையிடம் பேசி தனக்கான சீட்டை வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
செல்லும் இடமெல்லாம் வினோஜ் பி செல்வத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பையும், தங்கள் பிரச்சனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.இரண்டு தினங்களுக்கு முன் இவர் போட்ட ட்வீட் செம வைரல் ஆனது
அண்ணா தயாநிதி மாறன் அவர்களே மக்கள் பாவம் அவர்களை வைய்யாதீர்கள். அவர்கள் என்ன போட் கிளப்பில் ஏக்கர் கணக்கில் பல நூறு கோடி செலவில் மாளிகையா கேட்டார்கள்? எளிய மக்கள் மிகவும் சேதமடைந்த தங்கள் இல்லங்களை சீரமைக்க அவர்களது உரிமையைத் தானே கேட்டார்கள்! போதும் அவர்களை மிரட்ட வேண்டாம்..என இவரின் பதிவு செம வைரல்.
மேலும், மத்திய சென்னையின் வளர்ச்சி குறித்து தயாநிதிமாறனுடன் நேருக்குநேர் விவாதிக்க தயார். எந்த இடமாக இருந்தாலும் சரி, அங்கு சென்று விவாதத்தில் ஈடுபட தான் தயார் என பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் சவால் விடுத்துள்ளார்.