நீரில் மூழ்கி மருமகள் பலி – நீச்சலடித்து உயிர்தப்பிய மாமியார்

 

நீரில் மூழ்கி மருமகள் பலி – நீச்சலடித்து உயிர்தப்பிய மாமியார்

நீரில் மூழ்கி மருமகள் உயிரிழந்துவிட்ட நிலையில் நீச்சலடித்து உயிர் பிழைத்திருக்கிறார் மாமியார். ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

நீரில் மூழ்கி மருமகள் பலி – நீச்சலடித்து உயிர்தப்பிய மாமியார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. தொடையூர் அருகில் இருக்கும் ரயில்வே சுரங்க வழியாக பெண் மருத்துவர் சத்தியாவும் அவரது மாமியார் காரில் சென்று கொண்டிருந்தனர்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதை அறியாமல் தேங்கியிருக்கும் தண்ணீரை கடந்து விடலாம் என்ற நினைப்பில் காரை வேகமாக செலுத்தி இருக்கிறார் சத்யா. உயரமான கனரக வாகனமான லாரியே மூழ்கும் அளவிற்கு சூழ்ந்து நிற்கும் தண்ணீரில் போக முடியாமல் திணறியது கார். இதனால் சைலன்சரில் தண்ணீர் புகுந்து கார் நின்று விட்டது.

இதை அடுத்து காரை விட்டு வெளியேற முடியாமல் மருமகளும், மாமியாரும் தவித்திருக்கின்றனர். இதில் மருமகள் கார் ஓட்டிவந்ததால் சீட் பெல்ட் அணிந்து கொண்டிருந்திருக்கிறார். இதனால் அவர் காரை விட்டு உடனே வெளியே வர முடியாமலும் தண்ணீர் காருக்குள் உள்ளே நுழைந்து அதில் மூழ்கி மருமகள் உயிரிழந்திருக்கிறார். ஆனால் மாமியார் காரின் கதவை அடித்து உதைத்து திறந்து கொண்டு நீச்சல் அடித்து உயிர் பிழைத்திருக்கிறார்.

கரைக்கு வந்த மாமியார் சொன்ன தகவலை அடுத்து அங்கு திரண்ட கிராம மக்கள் சத்யாவை மீட்க சென்றனர். ஆனால் சடலமாக தான் அவரை மீட்க முடிந்தது. இதையடுத்து ஆபத்து மிகுந்த இந்த தரைப்பாலத்தினை மேம்பாலம் ஆக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.