#BREAKING வீரமணி வீட்டிற்கு சென்று வந்தபின் மகள் தற்கொலை - தாய் பரபரப்பு புகார்
ஜெம் வீரமணியால் தனது மகள் தற்கொலை செய்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை காவல் ஆணையரிடம் தாய் புகார் அளித்துள்ளார்.
'ஜெம் கிரானைட்ஸ்' ஆர்.வீரமணி எளிய குடும்பங்களை சேர்ந்த மற்றும் ஆதரவற்ற 100 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது தமிழக அரசு ஜெம் வீரமணி வழக்கை இனி SIT விசாரிக்கும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்ற பெண்ணும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஜெம் வீரமணியின் உதவியாளர் கணேசன் என இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெம் வீரமணியால் தனது மகள் தற்கொலை செய்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை காவல் ஆணையரிடம் தாய் புகார் அளித்துள்ளார். தனது பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் அறிமுகமான ஜெம் வீரமணி தனது மகளின் படிப்புக்கு உதவியதால் மகள் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2016ல் +2 படித்த மகள் வீரமணி வீட்டிற்கு சென்று வந்த பின் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் ஆணையரிடம் தாய் புகார் அளித்துள்ளார்.

