அதிமுக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்

 
eps

தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "

* தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை!

* அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு!

* கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் என, சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை!

*  மேகதாது பிரச்சனையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது!

உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகங்களின் சார்பில் 2.12.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள், 3.12.2026 வியாழக் கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்கெனவே அறிவித்த நிர்வாகிகளே, தலைமையேற்று நடத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.