இன்று முதல் 3 நாட்களுக்கு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து..!

 
1

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து, பக்தர்கள் பழனி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கும். அதன்படி, திரளான பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இந்நிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை மூன்று நாள்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் என்ற முன்னுரிமை இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் ஒரே வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.