ஏற்காடு மலைப்பாதையில் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங்

 
ச் ச்

ஏற்காடு மலைப்பாதையில் ஆபத்தான முறையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் ஸ்கேட்டிங் செய்யும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்காடு மலைப் பாதையில் வெளிநாட்டினை சேர்ந்த ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம்  ஏற்காட்டிற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமான வந்து செல்லும் நிலையில், ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகளை  அச்சுறுத்தும் வகையில் எவ்வித பாதுகாப்பும் இன்றி  வெளிநாட்டவர் ஒருவர் அதிவேகமாக ஸ்கேட்டிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இது குறித்து காவல்துறைக்கு புகார் வராத நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் ஸ்கேட்டிங்கில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.