“தலித் சிறுவனை கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்து அட்டூழியம்”- மதுரையில் அரங்கேறிய கொடுமை

 
ச்

மதுரையில் தலித் சிறுவனுக்கு நடந்தேறிய சாதிய தீண்டாமை அவலத்தை வன்மையாக கண்டிப்பதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

Image

இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மதுரைமாவட்டம் உசிலம்பட்டி சங்கம்பட்டி கிராமத்தில்,கடந்த 16-ஆம் தேதி தலித் சிறுவனை அப்பகுதியை சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நிதிஷ், மணிமுத்து ஆகியோர்கள் சேர்ந்து மது வாங்கச் சொல்லி காட்டயம் படுத்திருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக தலித் சிறுவனை கொடூரமாக தாக்கியும், சாதிரீதியாக கொச்சையாக பேசியும் சிறுநீர் கழித்தும் உள்ளது பேரவலத்தின் உச்சம்.


கடந்த மூன்று நாட்களாக வழக்கு பதிவுச் செய்யாத நிலையில் 18-ஆம் தேதி தோழர் சி.கா.தெய்வா வழக்கறிஞர், விசிக பெண் நிர்வாகிகள் சேர்ந்து உசிலம்பட்டி DSP அவர்களை சந்தித்து அழுத்தும் கொடுத்த பின்பு  உசிலம்பட்டி நகர் காவல்நிலை குற்ற எண்:26/2025- SCST_வன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை ஒரு குற்றவாளிகளை கூட கைது செய்யப்படவில்லை ஏன்? தலித் மக்கள் பிரச்சனையில் மெத்தனமாக உள்ளதாக அங்குள்ள சமூக செயற்பாட்டாளர் குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றனர், மதுரை மாவட்டத்தில் சம்மிகாலமாக நடந்தேறி வரும் சாதிய தீண்டாமை பிரச்சனைக்கு சரியான தீர்வு இனியாவது காணப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.