பிரீமியம் வசதியுடன் டேக் டெவலப்பர்ஸ் அறிமுகப்படுத்திய 'பால்மன்டைசா'... எங்கு தெரியுமா?
போரூர் – பூந்தமல்லி பிரதான சாலையில் 'பால்மன்டைசா' என்னும் புதிய உயர்தர குடியிருப்பு வளாகத்தை டேக் டெவலப்பர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையின் முன்னணி கட்டுமானத் துறை நிறுவனங்களில் ஒன்றாகிய டேக் டெவலப்பர்ஸ் (DAC Developers), போரூர்–பூந்தமல்லி பிரதான சாலையில், தனது புதிய 'பால்மன்டைசா' (BALMANDAISA) என்னும் பிரமாண்ட அல்ட்ரா-லக்சரி (Ultra Luxury) குடியிருப்பு வளாகத்தை இன்று (செப்டம்பர் 11, 2026), அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வில், லோகோ அறிமுகம் (Logo Reveal), திட்டத்தின் தொடக்க விழா (Project Launch) ஆகியவை 'பால்மன்டைசா வளாகத்தில் நடைபெற்றன. இதில் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு. சதீஷ்குமார் சந்தானம், முதல் பார்ட்னர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், ஜோஹோ நிறுவனத்தின் இணை தொடங்குனருமாகிய திரு. குமார் வேம்பு, ஆதித்ய பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுமான நிதிப் பிரிவின் சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர் திரு. ஆர். ஹரி விக்னேஷ், மற்றும் ஆதித்ய பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ப்ரைம் ஹோம் லோன்ஸ் பிரிவின் மண்டல விற்பனை மேலாளர் திரு. மஞ்சுநாத் செல்வமணி, நில உரிமையாளர் திரு. குமரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போரூர்–பூந்தமல்லி பிரதான சாலையில், குமணன் சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திட்டம் அமைந்திருப்பது, 'பால்மன்டைசா'வின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும், சென்னையின் முக்கிய பகுதிகளுடன் சிறந்த இணைப்பை வழங்கும் இந்த வசதி, வசிப்போரின் அன்றாடத் தேவைகளைச் சுலபமாகப் பூர்த்தி செய்வதோடு, முக்கிய இடங்களுக்கு எளிதில் சென்று வரவும் உதவும். அடித்தளப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 'பால்மன்டைசா' திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டு அடித்தளப் பகுதிக்காக (Two-Level Basement), டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் 'டயஃப்ரம் வால் டெக்னாலஜி' (DIAPHRAGM WALL TECHNOLOGY) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. உயரமான கட்டிடங்கள், பெரிய அளவிலான வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ உள்கட்டமைப்புத் திட்டங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை, குடியிருப்புத் திட்டங்களில் ஒரு சில முன்னணி கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்தத் தொழில்நுட்பம் உயர் கட்டமைப்பு வலிமை, நிலத்தடி நீர் கசிவைத் தடுக்கும் சிறந்த திறன் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான இடையூறு ஆகியவற்றை வழங்குகிறது. காலத்தைக் கடந்து நீடித்து நிலைக்கும் வீடுகளை உருவாக்குவதில் டேக் டெவலப்பர்ஸ் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.
194 பிரத்யேகக் குடியிருப்புகள் கொண்ட 'பால்மன்டைசா'வில், 2 மற்றும் 3 பி.எச்.கே. (BHK) குடியிருப்புகளுடன், விசாலமான 4 மற்றும் 5 பி.எச்.கே. (BHK) டியூப்லெக்ஸ் (Duplex) வீடுகளும் இடம் பெற்றுள்ளன. அதிக இடவசதி மற்றும் வசதியான வாழ்க்கை முறையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்குடியிருப்புகளில் பிரத்யேக தனி மேல் மாடி (Private Terrace) வசதியும் இடம் பெற்றுள்ளது. திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக தரைத் தளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்ட (G+3) 'தி மெரிடியன்' (“The Meridian”) என்று பெயரிடப்பட்ட - 10,000 சதுர அடி அளவிலான கிளப் ஹவுஸ் (Club house) ஒன்றும், தனிக் கட்டிடமாக அமையவுள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்ட - வாழ்வதற்கு தேவையான நவீன வசதிகள் (Premium Life Style Amenities) இதில் இடம் பெறும். போடியம் நீச்சல் குளம் (Podium Swimming Pool), உள்விளையாட்டு அரங்க அறை (Indoor Games Room), பலவிதமான பயன்பாடுகளுக்கு உதவும் அரங்கு (Multipurpose Hall), இணைந்து பணியாற்றும் இட வசதி (Co-working Space,), சிறிய தியேட்டர் (Mini Theatre), பார்ட்டி நடத்தும் வசதி கொண்ட மேல் மாடி (Roof Top Party Area), யோகா அறை (Yoga Zone) உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வு வசதிகள் குடியிருப்பாளர்களுக்காக உருவாக்கப்பட உள்ளன. இரண்டு பேஸ்மெண்ட் (Basement) தளங்கள் மற்றும் ஸ்டில்ட் லெவல் (Stilt level) என 3 தளங்களில் பார்க்கிங் வசதி மற்றும் 13 தளங்களில் குடியிருப்பு வசதிகளுடன் அமைய உள்ள 'பால்மன்டைசா', பிரீமியம் வாழ்க்கை முறையையும் நீண்டகால முதலீட்டு வாய்ப்பையும் ஒருங்கிணைக்கிறது.
இக்குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ₹1.19 கோடியில் இருந்து ஆரம்பமாகிறது. சிறந்த இருப்பிடம், விசாலமான குடியிருப்புகள், பிரைவேட் டெரஸ் (Private Terrace), பிரீமியம் வசதிகள், சிறந்த போக்குவரத்து தொடர்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த புதிய அல்ட்ரா-லக்சுரி முகவரியாக 'பால்மன்டைசா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்களிடம் உரையாற்றிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு. சதீஷ்குமார் சந்தானம், "எங்களது 'பால்மன்டைசா', பிரீமியம் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமானது, டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பயணத்தில், பெயர் சொல்லக் கூடிய ஒரு முக்கியமான லேண்ட்மார்க் திட்டமாகும் (landmark project). எங்களது டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம், இதுவரை 150-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், தற்போது சிவகங்கை மற்றும் கோயம்புத்தூரிலும் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளோம். துபாய் மற்றும் சிங்கப்பூரில் விற்பனை அலுவலகங்களைத் திறந்துள்ளதன் மூலம், சர்வதேச அளவில் எங்களது இருப்பை விரிவுபடுத்தி உள்ளோம்" என்று தெரிவித்தார்.

