#BREAKING சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!
Feb 1, 2026, 10:16 IST1769921165305
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
அந்தவகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. 2 மாதங்களில் ரூ.160 அதிகரித்ததால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.


