வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!!

 
tn

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆகியவை ஆகியவற்றின் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.39.50 குறைந்து ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டது. 

tn

கடந்த மாதம் 1ஆம் தேதி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வர்த்தக சிலிண்டர் விலை

இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.12.50 உயர்ந்துள்ளது. ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.1937 ஆக அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.