வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு; பிரதமருக்கு அண்ணாமலை நன்றி
மகளிர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைத்ததற்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi
அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும் @BJP4TamilNadu சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும் @BJP4TamilNadu… https://t.co/38LyUUisGL
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 8, 2024
சுமார் 10 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற நேற்றைய அறிவிப்பும், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற இன்றைய அறிவிப்பும், நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சிறந்த மகளிர் தின பரிசாக அமைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.