நின்று விளையாடும் டிட்வா புயல்

 
நின்று விளையாடும் டிட்வா புயல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய டிட்வா புயல் சென்னைக்கு அருகிலேயே நின்று கொண்டு தொடர்மழையை கொடுத்துவருகிறது.

“சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்” - வானிலை ஆய்வாளர் 


சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடித்துவருகிறது. சென்னைக்கு 50 கி.மீ. தூரத்தில் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்த நிலையில், கடந்த 6 மணிநேரமாக ஒரே இடத்தில் நீடிக்கிறது. அடுத்த 6 மணி நேரத்திற்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய டிட்வா புயல் சென்னைக்கு அருகிலேயே நின்று கொண்டு தொடர்மழையை கொடுத்துவருகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.