#BREAKING வங்கக்கடலில் உருவானது பெங்கல் புயல்

 
5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் பெங்கல் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.‌புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றும், கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது புயல்,  மழையை எதிர்கொள்ள தயாராகும் வகையில் புதுச்சேரி அரசும், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  கடந்த 27, 28 ஆகிய 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக  இருந்தது.  சுமார் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரித்திருந்தது. 

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் பெங்கல் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயலாக வலுப்பெற்றதால் மேற்கு - வட மேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே பெங்கல் புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாகையில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது பெங்கல் புயல்.