#BREAKING வங்கக்கடலில் அக்வான் புயல் உருவானது!

 
storm

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'அக்வான்' புயலாக உருவானது. 

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'அக்வான்' புயலாக உருவானது. இது மேலும் வலுவடைந்து நாளை மாலை தீவிர புயலாகவும், 19ம் தேதி காலை மிக தீவிர புயலாகவும் வலுப்பெற்று ஆந்திராவின் நெல்லூர் -துனி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  புயல் எதிரொலியாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்கிறார்கள். சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் மழையை, காற்றை எதிர்கொள்ளும் என்கிறார்கள். 

இந்தப் புயலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயரின் அர்த்தம் தற்போது மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலுக்கு ‘அக்வான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச வானிலை அமைப்பின் சுழற்சி முறைப்படி, இந்தப் பெயரை ஈரான் நாடு பரிந்துரைத்துள்ளது. பாரசீக மொழியில் ‘அக்வான்' என்பதற்கு ‘அசுரன்’ அல்லது ‘தீய சக்தி' என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புயலின் நகர்வு மற்றும் மழைப்பொழிவு குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.