சைபர் கிரைம் மோசடி - கடந்த 2 நாட்களில் 837 பேர் கைது

 
s

தமிழ்நாடு முழுவதும் மணி மியூல் மோசடியில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீஸ் அறிவித்துள்ளது. 


தமிழகம் முழுவதும் மணி மியூல் மோசடி மூலம் சுமார் ரூ.545 கோடி அளவிற்கு பணம் சுருட்டப்பட்டுள்ளதாகவும், 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்கள், 114 வங்கி பாஸ்புக், 29 செக் புக்ஸ், 73 ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர் வங்கிக் கணக்குகளின் தவறான பயன்பாடு மற்றும் செயல்பாட்டை தடுக்க மேலும் 157 புதிய FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6,7 இரு தினங்களில் சைபர் கிரைம் போலீசார் மணி மியூல் ஸ்பெஷல் ட்ரைவ் நடவடிக்கை எடுத்துள்ளது.