"வங்கி கணக்கிலிருந்து பணம் போய்டும்”- ஜிப்லி ஆர்வலர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

 
s

அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் புகைப்படங்களை ஜிப்லி வரைகலையாக மாற்றும்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

How users are generating 'Ghibli' style images with ChatGPT - The Statesman

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஜிப்லி புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.  OpenAI இன் ChatGPT 4o உதவியுடன் தங்களது புகைப்படங்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி அதனை சமூக வலைதளங்களி பதிவிட்டு வருகின்றனர். அதாவது வாட்ஸ் ஆப், வேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஜிப்லி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் புகைப்படங்களை ஜிப்லி வரைகலையாக மாற்றும்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் புகைப்படங்களை வழங்கும்போது தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், ஜிப்லி வரைகலைக்காக வழங்கப்படும் புகைப்படங்களை விஷமிகள் சைபர் கிரைம்களுக்கு பயன்படுத்த அதிகம் வாய்ப்புள்ளது என்றும் போலீசார் கூறுகின்றனர். ஆகவே ஜிப்லி வரைகலைக்காக புகைப்படங்களை ஏஐ தளங்களுக்கு வழங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர். புகைப்படங்கள் மூலமாக நாம் கொடுக்கும் புகைப்படங்களை வைத்து நமது பயோமெட்ரிக் தகவல்களை இணையதளங்களால் பெற இயலும் என்றும் பயோமெட்ரிக் தகவல்களை வைத்து விஷமிகள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருட முடியும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.