எனக்கு நயன்தாரா வேணும்.. என் கனவ முதல்வர் நிறைவேத்துவாரா?- சி.வி.சண்முகம்

 
s

தமிழக முதல்வர் கனவை சொல்லுங்கள் என்கிறார் எனக்கு நடிகை நயன்தாரா வேண்டும் கொடுப்பாரா? என்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK MP CV Shanmugam sparks outrage with 'free wife' remark, DMK  highlights women welfare schemes in Tamil Nadu - Tamil Nadu News | India  Today

சட்ட ஒழுங்கு சீர்கோட்டை கண்டித்தும் பாலியல் வன்கொடுமைமைகளை கட்டுப்படுத்தக்கோரி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் அதிமுக  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ச்சுனன் பாமக எம்எல்ஏ சிவக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்பட்டத்தில் சட்ட ஒழுங்கை கட்டுபடுத்த கோரி முழக்கமிட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசியதாவது, “விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி விஷம் போல் ஏரியுள்ளது. அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. 13 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறுகிறார்கள் அப்படியானால் எவ்வளவு இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளனர். அரசில் ஐந்து லட்சம் வேலை காலியாக உள்ளது. ஏன் அந்த வேலைவாய்பை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழ்நாட்டில் உள்துறை செயலாளரை பாஜக மாற்ற வேண்டும்.ஒருதலைபட்சமாக செயல்படும் உள்துறை செயலாளரை வைத்துக்கொண்டு எப்படி தேர்தலை நியாயமான நடத்த முடியும். தேர்தல் ஆணையம் உள்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆட்சியின் மீது நம்பிக்கை இருந்தால் ஏன் ஐந்தாயிரம் வழங்க வேண்டும்.முதல்வர் உங்கள் கனவு சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும்  என கேட்கிறேன் கொடுப்பாரா? அதனை தொடர்ந்து மற்றவர்கள் கேட்பார்கள் கொடுப்பாரா?” என்றார்.