“ஒரு குடும்பத்தின் பிடிக்குள் அதிமுக சென்று கொண்டிருக்கிறது! யாரும் கேள்வி கேட்க முடியவில்லை”- சி.வி.சண்முகம் மீண்டும் போர் கொடி

 
“திருமாவளவன் முதல்வராவது இபிஎஸ்க்கு பிடிக்கவில்லை; இறுதிவரை நான் மட்டுமே முதல்வராக இருக்க வேண்டுமென கூறினார்”- சி.வி.சண்முகம் 

தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் வரை உணர்ந்துள்ளனர், ஆனால் ஈபிஎஸ் உணரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுக எம்பி சிவி சண்முகத்துக்கு 'டிஜிட்டல் கைது' ஸ்பேம் அழைப்பு

திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்வி கிடைத்துள்ளது. கேள்வி எழுப்பியதற்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், தற்போது யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது. தற்போது இபிஎஸ் உடன் ஆமாம் சாமி போடுபவர்கள் மட்டுமே உள்ளனர். குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் வரை உணர்ந்துள்ளனர், ஆனால் ஈபிஎஸ் உணரவில்லை. சீட்டுக்கட்டுகளை போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்கள், பணத்தை செலவு செய்தவர்கள் வேதனையுடன் வெளியேறுகின்றனர். வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை துரோகிகள் என்பதா? அதிமுக தலைமை சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொண்டது. திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று திட்டமிட்ட போதே அதிமுக தனது சுயத்தை இழந்துவிட்டடு. திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதால் அவர் துரோகி ஆகிவிட்டாரா?

பாமக கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் 7, 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. தொண்டர்களால் உருவான இயக்கம், தற்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் அதிமுக சென்று கொண்டிருக்கிறது. தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கு இபிஎஸ் டிராமா செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.