“ராஜினாமா செய்வது உறுதி” - சி.வி.சண்முகம்

 
cv

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார் சி.வி.சண்முகம்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார் சி.வி.சண்முகம். அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பயங்கரமாக ஆவேசப்பட்ட சி.வி.சண்முகம், செய்தியாளர்களை கண்டித்ததுடன் நோ கமெண்ட்ஸ் எனக் கூறிவிட்டு சென்றார். முன்னதாக ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளேன். அதிமுகவுக்காக எப்போதும் உண்மை உள்ளவனாக செயல்பட்டிருக்கிறேன். ஆனால் இபிஎஸ் பிடிவாதம் இந்த கட்சிக்கு நல்லதல்ல. அதனாலேயே இந்த முடிவை எடுக்கிறேன் என ஆதரவாளர்களிடம் சிவி சண்முகம் கூறினார்.

தன்னிடம் சமாதானம் பேசிய மூத்த தலைவர்களுடன் சி.வி.சண்முகம் உடன்படுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவசரம் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என கேட்டதாக கூறப்படுகிறது.அனைவரிடமும் ஒப்புதல் பெற்ற பிறகு தானே இந்த முடிவை எடுத்தோம். பிறகு ஏன் இப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டு என்னை வில்லன் ஆக்கிவிட்டீர்களே? என சி.வி.சண்முகம் ஆவேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.