#BREAKING சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆலோசனை

 
சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆலோசனை

சென்னை எம்.ஆர்.சி. நகரில் சி.வி சண்முகம் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

அதிமுக முன்னாள அமைச்சர் தவெகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சி.வி.சண்முகத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்தார். மேலும தங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆலோசனையில், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், திருத்தணி அரி, தருமபுரி கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். சி.வி.சண்முகம் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தங்கள் தரப்பு வலிமை குறைந்து வரும் நிலையில் எம்எல்ஏக்களை தக்க வைப்பது தொடர்பாக அவசரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமாரை தொடர்ந்து, இசக்கி சுப்பையாவும் பதவி விலகியதை அடுத்து அதிமுகவின் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 43 ஆக சரிந்தது. தற்போது வரை இபிஎஸ் தரப்புக்கு 27 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும், சி.வி.சண்முகம் தரப்புக்கு 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது.