திராவிடன் என்றால் ரன் அவே, ஓடிப் போனவன்’ திமுகவை வறுத்தெடுத்த சிவி சண்முகம்

 
cv

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு கடைவீதியில் நடந்தது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். இதில் அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். 

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி..! | Former  minister CV Shanmugam admitted to hospital

கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம்,  “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே மின் வெட்டு அதிகமாக உள்ளது. முதலமைச்சர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதில் டார்ச் அடித்துக் கொண்டு ஒருவர் செல்கிறார். யார் என்று பார்த்தால் அவர்தான் தமிழகத்தின் டிஜிபி சைலேந்திரபாபு. முதலமைச்சர் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு இருக்கிறது. இதற்கு மேல் வேறு எந்த உதாரணமும் தேவை இல்லை. இதை சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள். வழக்குப் போடுவேன் என்கிறார்கள். அனிதா மரணத்தை அரசியலாக்கி சுயநலத்துக்காக உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றார்கள். ஆனால் இந்த ஒரு ஆண்டில் நீட்டுக்காக 20 பேர் வரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டாவது சுரங்க முடிவடையாத நிலையில் மூன்றாவது சுரங்கத்திற்கு வந்து விட்டார்கள். தினக்கூலியாக வேலை தருகிறேன் என்கிறார்கள். ஆனால் வடநாட்டவருக்கு வேலை தருகிறார்கள். இரண்டாவது சுரங்கத்திற்காக 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி இருக்கிறது. ஆனால் மூன்றாவது அரங்கத்திற்காக நிலம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? நிலம் எடுக்கும்போது வழிகாட்டி மதிப்பில் பணம் தராமல் சந்தை மதிப்பிற்கு பணம் தர வேண்டும்.

திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். திராவிட மாடல் என்றால் என்ன தெரியாத ஒன்றை கவர்ச்சிகரமாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு இவையெல்லாம் சேர்ந்ததுதான் திராவிடம். இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு விட்டது. திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா சென்னை என்று இருந்ததை திராவிட நாடு என்று மாற்றவில்லை. தமிழ்நாடு என்றுதான் மாற்றினார். கர்நாடகா, கேரளா மாநிலங்கள் தண்ணீர் தண்ணீர் தருவதில்லை. ஆந்திரா அவ்வப்போது முரண்டு பிடிக்கிறது. திராவிடன் என்றால் ரன் அவே, ஓடிப் போனவன் என்று பொருள். திராவிடன் என்பது தூய சமஸ்கிருத வார்த்தை. திராவிடன் என்று சொல்லி இந்த மக்களை ஏமாற்றுவது திமுகவிற்கு கைவந்த கலை.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றல்லை. நாட்டிலுள்ள பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து  செய்து விட்டார்கள். அனைத்து வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி விட்டு, கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்தார்கள். அதற்கும் பல்வேறு விதிமுறைகளை வைத்தார்கள். நகைக்கடன் வைத்தது 50 லட்சம் பேர். ஆனால் தள்ளுபடி 14 லட்சம் பேருக்கு மட்டுமே.

       தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது. கூட்டுப் பாலியல் வன்முறை தினமும் நடக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா விற்பனை கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது தலைமைக்கு நிர்வாகம் தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து வருகிறார். பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குகிறார்கள். இந்த பட்ஜெட்டில் 95 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் வாங்கிய கடன் பெறும் மூன்றேகால் லட்சம் கோடி மட்டுமே” என பேசினார்.