வாடிக்கையாளர் ஷாக்..! அப்ப பேங்க்லையும் பாதுகாப்பு இல்லையா ? எஸ்பிஐ லாக்கரில் வைத்த நகை மாயம்..!

 
1

திருச்சி எடமலைப்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வி. தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தனது சொந்த ஊரான  எடமலைப்பட்டி புதூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தனக்கு ஒதுக்கப்பட்ட லாக்கரில் 11 சவரன் நகைகளை வைத்து சென்றுள்ளார்.இதனை வீடியோவாகவும் எடுத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 13 ந்தேதி கலைசெல்வியை வங்கிக்கு வருமாறு அவரசமாக அழைத்துள்ளனர் வங்கி அதிகாரிகள்.வங்கி லாக்கர் தவறுதலாக மாறியுள்ளது என சமாளித்துள்ளனர்.வந்து பார்த்த கலைச்செல்விக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. தனக்கு கொடுத்த லாக்கர் 87 வயதுடைவர் லாக்கர் என்றும் மாறுதலாக அவருடைய லாக்கர் ஸ்பேர் கீ கொடுத்துவித்ததாகவும் சமாளித்தனர்.லாக்கரை திறந்து பார்த்தால் மற்றொரு அதிர்ச்சி, தான் வைத்த 11 சவரன் நகை பையை காணவில்லை.   

தனக்கு கொடுத்த லாக்கர் கீ மற்றுமொருவருக்கு எப்படி கொடுக்க முடியும் என வாக்குவாதம் செய்தார்.  இறுதியில் நகை திருடியது யாரு என்று தெரியாமல் விழி பிழிந்து இருக்கின்றனர் வங்கி அதிகாரிகள்.தான் கஷ்டப்பட்டு சேர்த்த நகைக்கு எங்கே போனது என தெரியாமல் இருக்கிறார் கலைச்செல்வி.

இப்படி கூட வங்கியில் நடக்குமா என புலம்பும் கலைச்செல்வி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.