கடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : மூவர் பலி..

 
கடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : 2 மாணவர்கள் உள்பட மூவர் பலி..    கடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : 2 மாணவர்கள் உள்பட மூவர் பலி..   

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 


கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று,  குழந்தைகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அவ்வழியே ரயில்வே கேட் ஒன்று இருந்த நிலையில்,  அதனை கடந்து செல்ல பேருந்து முயன்றுள்ளது. அந்தநேரத்தில் அவ்வழிய்டே சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வேன் மீது அதிவேகமாக மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதோடு, வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  அதற்குள்ளாக காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் வேன் உதவியாளர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து நேர்ந்த போது  ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது.  ரயில்வே கேட்டை மூடுவதற்காக பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது.  அவர் பணியின் போது தூங்கியதாலும், ரயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டதுமே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதனை அடுத்து ரயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின்  தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது.