“கேவலமான அண்ணாமலை பற்றி பேச வேண்டாம்”- நிர்மல்குமார்
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என தமிழக வெற்றி கழக இணைப் பொது செயலாளர் CTR நிர்மால் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழக இணைப் பொது செயலாளர் CTR நிர்மல் குமார், சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கழிப்பறை மற்றும் உணவருந்த கூட செல்லாமல் காவல்துறை அடக்குமுறை செய்து வருகின்றனர். இந்த மூன்று நாட்களாக அடக்குமுறை நடைபெற்று வருகிறது. தமிழக காவல்துறை கொச்சையாக அவதூறாக பேசி வருகின்றனர். உதயநிதியின் கீழ் இந்தத் துறையை செயல்படுகிறது. இதுவரைக்கும் கூப்பிட்டு பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை, பிறப்பால் துணை முதல்வர் ஆனார் உதயநிதி. அடக்கு முறையை செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்தலில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.
உங்க எல்லாருக்கும் தெரியும், அதிமுக கூட்டணிகளை யார் அமைத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அறிவிப்புகளை யார் வெளியிட்டது பாஜக தான். NDA கூட்டணி என்றால் பாஜக கட்சி கூட்டணி தான். கூட்டணி குறித்து யார் தலைமை ஏற்கிறார்களோ. அவர்கள்தான் கூட்டணி தலைமையில் தான் நடைபெற்றது பிரதமர் தான் தலைமை தாங்கினார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கை யார் கொடுக்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றினார்களா? நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. தவெக என்ஜின் ஒட்டை என்ஜின் என அண்ணாமலை விமர்சிக்கிறார். இரட்டை கொலை செய்து தவழ்ந்து ஆட்சி பிடித்த தற்குறி பழனிசாமி என்று மேடையில் சொன்ன அண்ணாமலை ஒரே ஆண்டில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம். பொது வாழ்வில் இது போன்ற கேவலமான நபர்கள் பற்றி பேச வேண்டாம் என்பது தாழ்மையான கருத்து” என்றார்.


