“புதிதாக 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கம்”- நிர்மல்குமார்

 
“விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை வலுபடுத்த 5 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு இடத்திலும் தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை தடை”- நிர்மல்குமார்

இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படியும். தூய்மையான, நேர்மையான, புதுமையான மற்றும் மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற அரசின் உயரிய நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும். முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் எளிமையான சேவைகளை வழங்கவும் முக்கிய நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (NCES) வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.