“யாருடைய தலைமையில் அதிமுக நடக்குதுன்னு தெரியவில்லை”- நிர்மல்குமார்

 
“யாருடைய தலைமையில் அதிமுக நடக்குதுன்னு தெரியவில்லை”- நிர்மல்குமார்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அதிமுக- திமுகவும் ஒரே கூட்டணியில் இணைந்து பாஜகவுடன் சேர்ந்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் யாருடன் சேர்ந்தாலும் எந்த தேர்தலிலும் எங்க கிட்டயே வர முடியாது. யாருடைய தலைமையில் அதிமுக நடக்குதுன்னு தெரியவில்லை. அக்கட்சியில் இருந்து தவெக வர தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். நேரு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. முதலமைச்சரின் பதிலுரை நீண்டதாக இருக்கும் என்பதால், சட்டப்பேரவையில் திங்களன்று கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சரின் பதில் முடிந்த பிறகு கேள்வி நேரம் வைத்துக் கொள்ளப்படும். மதுரைக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வரப்போறோம்.. மதுரை முழுவதும் நமக்கு இருக்க பெரிய பிரச்சனை பாதாள சாக்கடை பிரச்சனை. இத்தனை வருடம் இங்க இருந்தவங்க என்ன பண்ணாங்கனே தெரியவில்லை. 

மக்கள் எதுக்காக திமுகவை புறக்கணித்தார்கள் என அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.. முதலில் நீங்கள் கட்சியை விட்டு வெளியேறுங்க.. கட்சிக்குள் ஜனநாயகத்தை கொண்டு வாங்க..  இந்தியா முழுவதும் இந்த தேர்தலை பார்த்து மிரண்டுட்டாங்க.. நாம் நல்லது நிறைய செய்வோம்னு மக்கள் காத்திட்டு இருக்குறாங்க.. அவர்களுக்காக 24 மணி நேரமும் பணி செய்வதில் தப்பில்லை.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்” என்றார்.