விஜயை இன்னமும் கரூர் செல்ல விடாமல் தடுக்கிறார்கள் - நிர்மல் குமார்

 
பெரம்பூரில் திரும்ப திரும்ப மின் வெட்டு பிரச்னை- நிர்மல் குமார்

முதல்வராக இருக்கிற விஜயை இன்னமும் கரூர் செல்ல விடாமல் தடுக்கிறார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

“சிபிஐ அதிகாரிகள் சம்மன் தர வந்தனர்” -  சி.டி.நிர்மல் குமார்

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர் நிர்மல் குமார், “முதல்வர் விஜய் கரூருக்கு செல்வதை தடுக்க திமுக சதி செய்கிறது. முதல்வராக இருக்கிற விஜயை இன்னமும் கரூர் செல்ல விடாமல் தடுக்கிறார்கள். மிழக முதல்வர் விஜய் கரூருக்குச் செல்ல முடியாதபடி தடுத்து, முட்டுக்கட்டை போடும் வேலைகளைத் தி.மு.க தொடர்ந்து செய்துவருகிறது. இதையெல்லாம் தாண்டி அவர் அங்கே செல்வார். இன்று ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும்போதே அவருக்கு இந்த நிலைமை என்றால், இதற்கு முன்பு சாதாரணக் குடிமகனாக இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? முதல்வர் விஜய் கரூர் செல்கிறார் என்று தெரிந்த உடனேயே நீதிமன்றத்தில் மனு போட்டு அதைத் தடுக்கப் பார்க்கிறார்கள். செந்தில்பாலாஜி ஏன் ஓடி ஒளிகிறார்? சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராவதில் என்ன சிக்கல்? 100 சதவீதம் தவறு இருப்பதால் தான் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை.

கரூரில் அசம்பாவிதம் நடைபெற்ற அந்தச் சமயத்தில் முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகம் போன்றவற்றைத் தி.மு.க-வினர் உளவு பார்ப்பது போல் கண்காணித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிதியுதவி கூடக் கொடுக்க விடாமல் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுத் தடுத்தனர். மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அரசு வழக்கறிஞர் நியமனம் 100% நேர்மையாக, நியாயமாக மேற்கொள்ளப்படுகிறது. பணம் பெற்றுக்கொண்டு நியமனம் என்ற குற்றச்சாட்டு தவறானது. நியமனங்கள் தொடர்பாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.