விஜய் 24 மணிநேரமும் மக்களுடன் இருக்கத் தயார்- சிடிஆர் நிர்மல் குமார்

 
”கரூர் துயரத்திற்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்று உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டே நயினார் நாகேந்திரன் சொல்கிறார்”- நிர்மல் குமார்

திருமாவளவனும் சீமானும் திமுகவின் ஊதுகுழல்கள் என திருப்பரங்குன்றம் தொகுதி தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பரங்குன்றம் தொகுதி தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார், “விஜய் மீதான பிரகாஷ் ராஜ் போன்ற தனிநபர்களின் கருத்துகளுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. மக்களின் பாதுகாப்பு மற்றும் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல் காரணமாகவே விஜய் இரவு நேரப் பரப்புரையைத் தவிர்க்கிறார். அவர் 24 மணி நேரமும் மக்களுடன் இருக்கத் தயாராக இருக்கிறார். திருமாவளவனும் சீமானும் திமுகவின் ஊதுகுழல்கள். தமிழ்நாடு முழுவதும் ட்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.அவர்களுக்கே கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுக்கவில்லை. திமுக என்ன சொல்லுதோ அதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். வைகோ, திருமாவளவனும் தனித்துவத்தை இழந்துவிட்டனர். தொழிலாளர்களின் உயிருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை, வெறும் 500 ரூபாய்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை கொடூரமானது” என்றார்.