“எடப்பாடி உட்பட 234 தொகுதிகளிலும் தவெகவினரின் வேட்புமனு ஏற்பு”- நிர்மல்குமார்

 
ச்

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது, தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கூறியுள்ளார். 

Image

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “தமிழ்நாட்டில் 234 தொகுதிகளும் ஆய்வு நடந்தது. அதில் எங்களுடைய அனைத்து வேட்பாளர்களுடைய வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் முறையாக எங்களுடைய கட்சியின் சார்பாக தேர்தலை சந்திக்கும் எங்களுடைய வேட்பாளர்கள் திமுகவுடைய பல சூழ்ச்சிகளுக்கு நடுவில், பல பிரச்சனைகளுக்கு நடுவில், எல்லா இடத்திலும் எங்களுடைய வேட்பாளர்களுக்கு, அப்ஜெக்ஷன் தெரிவிந்திருந்தார்கள். எந்த அதிமுகவுடைய வேட்பாளர் யாருக்கும் அப்ஜெக்ஷன் தெரிவிக்கவில்லை. எல்லா இடத்திலையும் இப்போது எனக்கு உட்பட எல்லாருக்கும் வந்து ஏதாவது ஒரு காரணங்களைச் சொல்லி திமுக வந்து அப்ஜெக்ஷன் தெரிவித்துள்ளார்கள்.  நாளைக்கு எங்களுடைய தலைவருடைய சுற்றுப்பயணம் திருநெல்வேலியில் இருக்கிறது. தவெக தொண்டர்கள் அளித்த ஆதரவால்தான் சீமான் 8% வாக்கு பெற்றார். அதிமுகவை இன்று வழி நடத்துவதே பியூஷ்கோயல் தான், யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதையே அவர் தான் முடிவு செய்கிறார்.

இந்த அப்ரூவல் ரொம்ப கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் தான் கிடைத்தது. எல்லா இடத்திலும் எங்களுடைய தலைவருடைய அப்ரூவலுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் வருகிறது. இப்போது ஒவ்வொரு இடத்துக்கும் நாங்கள் அப்ரூவல் கேட்டு அப்ளை பண்றோமோ, அதுக்கு அப்புறம் உடனே “சிஎம் ப்ரோக்ராம் இருக்கு”ன்னு ஒரு இன்பர்மேஷன் வருது. அதனால் தேதியை மாத்துங்கன்னு சொல்றாங்க. இந்த கடுமையான போராட்டம் எல்லா இடத்திலும் இதே பிரச்சனையாவே கொண்டு வராங்க. நிறைய இடங்களில் அப்ளை பண்ணி வச்சிருக்கோம். பல தேதிகள்ல ஒவ்வொரு ஊரிலும் அப்ளை பண்ணி வச்சிருக்கோம். ஆனால் காவல்துறையில இருந்தோ, “சிஎம் ப்ரோக்ராம் இருக்கு”, “இவருடைய ப்ரோக்ராம் இருக்கு”ன்னு ஏதாவது சொல்லி எங்களுடைய தேதியை மாற்றச் சொல்றாங்க. இப்ப புதுக்கோட்டையில இந்த மாதிரி வந்திருக்கு, தர்மபுரியில இந்த மாதிரி DISPUTE வந்திருக்கு. ஒவ்வொரு இடத்திலும் இந்த மாதிரியான ISSUES எங்களுக்கு வந்துட்டே இருக்கு. அதனால இதையெல்லாம் கருத்தில் கொண்டு எங்களுடைய தலைவருடைய சுற்றுப்பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது” என்றார்.