"புதுச்சேரியில் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன... ஆனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன"- நிர்மல்குமார்

 
ச் ச்

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. ஆனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன என தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், “புதுச்சேரியில் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. ஆனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டும், ரேஷன் கடைகள் இருக்கின்றன என்று அர்த்தம் இல்லை. வழக்கமாக அங்கு ரேஷன் கடைகள் இயங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போது எதுவும் கருத்து சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணிவரை தீபம் ஏற்றுவதாகக் கூறி வந்தனர். அதனால்தான் அங்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. நீதிமன்றத்தில் அங்கு தீபம் ஏற்ற முடியாது என்று முன்பே தெளிவாகச் சொல்லியிருந்தால் ஏன் அங்கு கூட்டம் கூடி இப்படியாக பதற்றமான சூழல் ஏற்படப்போகிறது? விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு வரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி முடிவுகள் எதுவாயினும் அதை தலைவர் அறிவிப்பார்” என்றார்.