பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் CTR நிர்மல் குமார் ..

 
 பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் CTR நிர்மல் குமார் ..

தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து  விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  அதிமுகவில் இணைந்தார்.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் நிர்மல் குமார்.  இந்நிலையில் இன்று நிர்மல் குமார் பாஜகவுல் இருந்து விலகியிருக்கிறார். ‘கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடை பெறுகிறேன்..’ என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதம் ஒன்றையும்  அவர் வெளியிட்டிருக்கிறார்.  

CTR Nirmal Kumar

அத்துடன், ‘சொந்தகட்சி நிர்வாகிகளையையே வேவு பார்க்கும் அல்பத்தணம் கொண்டவர்’, ‘கமலாலயத்தை வியாபாரம் ஆக்கியவர்’,‘மனநலம் குன்றியவர்’,‘அமைச்சருடனே பேரம் பேசுபவர்’, ‘420-மலை’,‘தமிழகத்திற்கே கேடு’ என்பது  போன்ற கடுமையான விமர்சனங்களையும் தனது  ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  அத்துடன் , பாஜகவில் இருந்து விலகிய கையோடு  சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், பூங்கொத்துக் கொடுத்து அவர் அதிமுகவில் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.