சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி அசோக் லேலண்ட் தலைமை அலுவலகத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம்,5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அதிகாரப்பூர்வ ‘பிரின்சிபல் ஸ்பான்சராக’இணையும் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், சிஎஸ்கே அணியின் "பிரின்சிபல் ஸ்பான்சராக" இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மைபில் , ‘விசில் போடு’என்ற வசனத்தோடு ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘சிஎஸ்கே ரசிகர் பேருந்து’ (CSK Fan Bus) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பேருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு செல்லும். மேலும் 2026 சீசனுக்கான சிஎஸ்கே ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் புதிய ஸ்பான்சராக அசோக் லேலேண்ட் நிறுவனம் இணைந்துள்ளது.

