அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு
Jul 14, 2026, 15:51 IST1784024460680
ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 10% உயர்ந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 85 டாலரை நெருங்குகிறது. 2020ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று ஒரே நாளில் சுமார் 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.62% உயர்ந்து ஒரு பேரல் $83.32 ஆகவும், WTI கச்சா எண்ணெய் விலை 9.4% உயர்ந்து ஒரு பேரல் $78.14 ஆகவும் அதிகரித்தன.

