சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடல்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கிரவுன் பிளாசா டிசம்பர் 20 ஆம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள 5 ஸ்டார் ஹோட்டல் கிரவுன் பிளாசா. அடையாறு ஷெரடன் பார்க் & டவர்ஸ் என்று அழைக்கப்பட்டுவந்த இந்த கட்டிடத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் குழு வாங்கிய பின்னரே கிரவுன் பிளாசாவாக மறு பெயரிடப்பட்டது. 283 அறைகளையும், 32 suites, ஐந்து உணவகங்களை கொண்டுள்ள இந்த ஹோட்டல் எட்டு அடுக்குமாடிகளைக் கொண்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட கிரவுன் பிளாசா வரும் டிசம்பர் 20 ஆம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் தங்களுக்கு கொடுத்த விசுவாசத்திற்கும் ஆதரவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விருந்தினர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள கிரவுன் பிளாசா நிர்வாகம், ஹோட்டல் கட்டிடத்தை பிரபல கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டவுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. டிசம்பர் 20, முதல் விருந்தினர் வருகைக்கான தங்கள் கதவுகள் மூடப்படும் என கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்வதாக கிரவுன் பிளாசா நிர்வாகம்,கூறியுள்ளது.
அதுவரை அறை முன்பதிவுகளுக்கு, reservations@cpchennai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், உணவகம் தொடர்பான முன்பதிவுகள் அல்லது கூடுதல் விவரங்களுக்கு, 9003261981 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.