வேளச்சேரியில் அலைமோதிய மக்கள் கூட்டம்! ரயில்கள் இயக்கப்படவில்லை என வேதனை

 
ச்

சென்னை மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியைக் காணச் செல்வதற்காக வேளச்சேரி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Image

சென்னை மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போதிய ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ரயிலுக்காக காத்திருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று அரை மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.

வேளச்சேரி ரயில்கள் வருவதற்கு தாமதமாவதால் பொதுமக்கள் தண்டவாளங்களில் நடந்து செல்கின்றனர்.  விமான சாகச நிகழ்ச்சியை காண மெரினா சென்றவர்களை விட வேளச்சேரி ரயில் நிலையம் வந்து திரும்பி வீடுகளுக்கு சென்றவர்கள் தான் அதிகம், இதற்கு கூடுதல் ரயில்கள் இயக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.