பழனியில் கூட்டநெரிசல்- அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்!

 
ச்

தொடா் விடுமுறையை ஒட்டி பழனி முருகன் கோவிலில் தாிசனம்  செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்த நிலையில் பலா் மயக்கமடைந்தனர்.


முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து,  சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை  கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை ,பாதை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது .விரைவாகவும்,  இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார்  மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.

இந்நிலையில் மொஹரம் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர் 3 நாட்கள் அரசு விடுமுறையை முன்னிட்டுப் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்யக் குவிந்தனர். கூட்டம் அலைமோதியதால் பலா் மயக்கமடைந்தனர். ரூ.100 கட்டண வாிசையில் காத்திருந்த பெண்கள் வெயில் காரணமாக அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனா். தண்ணீர், நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், கொளுத்தும் வெயிலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.