முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..! மதுவுடன் கார் ஓட்டினாரா முதல்வர் விஜய்?
Jun 16, 2026, 06:00 IST1781569859000
கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் தமிழக முதலமைச்சர் விஜய்.கோயிலுக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் அவரே சொந்தமாகக் காரை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
விஜய் ஓட்டிச் சென்ற காரின் உள்பகுதியில் (Storage compartment) ஒரு கிளாஸ் வைக்கப்பட்டிருந்தது. அதில் பாதியளவு ஏதோ ஒரு திரவம் (Liquid) நிரப்பப்பட்டிருந்தது. இதை கவனித்த எதிர்த்தரப்பினர், “அது மதுபானம் (Liquor)… ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே மது அருந்திவிட்டு கார் ஓட்டுகிறார்” என்று விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சமூக ஊடக ஆதரவாளர்கள் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளனர். “அதில் இருப்பது மதுபானம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அது வெறும் ஜூஸாக (Juice) அல்லது தண்ணீராகக் கூட இருக்கலாம். எல்லாவற்றையும் அரசியல் உள்நோக்கத்தோடு குற்றக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது” என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பொட்டு மாமா காரில் உள்ள பிளாஸ்டிக் கப்பில் என்ன இருக்கிறது?
— ஜெயராமன் திமுக (@jayaraman418) June 15, 2026
விசாரணை தேவை?? pic.twitter.com/VdKxh7c85Q

