திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை

 
திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி பேட்டியளித்துள்ளார்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது கலப்பட நெய் கொண்டு லட்டு பிரசாதங்கள் தயார் செய்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு நியமித்த முன்னாள் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் குமார் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இதில் அப்போதைய செயல் அதிகாரி அணில் குமார் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர்கள் சுப்பா ரெட்டி, கருணாகர ரெட்டி உள்ளிட்டோர் நெய்யே இல்லை என தெரிந்தும் அதனை கொள்முதல் செய்து பிரசாதங்கள் தயார் செய்து விற்பனை செய்து வந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி பேசுகையில் கடந்த ஆட்சியில் பக்தர்கள் புனிதமாக கருதக்கூடிய லட்டு பிரசாதத்திற்கு அசல் நெய்யை பயன்படுத்தாமல் ரசாயனங்கள் கொண்ட கலவையைக் கொண்டு தயார் செய்து மிகப்பெரிய அநியாயம் இழைக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் குறித்து ஒரு நபர் ஆணையம் தலைவர் தினேஷ்குமார் ஐஏஎஸ் சமர்ப்பித்த அறிக்கையில் தொடர்புடைய அதிகாரிகள் அணில் குமார் சிங்கால், தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர்கள் சுப்பா ரெட்டி, கருணாகர ரெட்டி உள்பட அனைவர் மீதும் கிரிமினல் வழக்கு தொடர்ந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும். இதற்காக வரும் ஆறாம் தேதி நடைபெறக்கூடிய தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அவர்கள் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு அரசுக்கு பரிந்துரை செய்து புகார் அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.