“திருமணம் ரத்து செய்யப்பட்டது”- ஸ்மிருதி மந்தனா சோகத்துடன் அறிக்கை

 
ச் ச்

உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. இந்த விஷயத்தை கடந்து முன்னேறிச் செல்ல வேண்டிய நேரம் இது என திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் நவ.23 அன்றும் நடைபெறவிருந்த நிலையில், ஸ்மிருதியின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்மிருதியின் காதலர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

படம்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது எக்ஸ் தளத்தில், “கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏராளமான யூகங்கள் இணையத்தில் வலம் வருகிறது. நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டேன். இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். எனது திருமணம் செய்து செய்யப்பட்டது என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன். இந்த விஷயத்தை இப்படியே முடித்து கொள்ள விரும்புகிறேன். அனைவரையும் எதோ இரு உயர்ந்த நோக்கம் வழிநடத்துகிறது என்று நம்புகிறேன். எனக்கு அது எப்போதும் இந்தியாவை உயர்ந்த மட்டத்தில் பிரிதிநிதித்துவப்படு்த்துவதுதான். முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வென்று தருவதில்தான் என் கவனம் எப்போதும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.  இந்த விஷயத்தை கடந்து முன்னேறிச் செல்ல வேண்டிய நேரம் இது.இதில் இருந்து கடந்து செல்வதற்கு உதவியாக, இருவரது குடும்பத்தினரின் தனியுரிமையை மதித்து அனைவரும் செயல்பட வேண்டுகிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.