போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்குக - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

 
tn

போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

drug heroin

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு காலத்தில் அமைதியும் ஒழுக்கமும் நிலவிய தமிழகத்தில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப்பொருள், கொள்ளை, கொடிய குற்றச்செயல்கள் நிறைந்த நாடாக மாறியுள்ளது. இதன் உச்சமாக, கடந்த 2022 ம் ஆண்டு போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும்  போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்டார். ஆனால் தற்போது நடப்பது என்ன..? போதைப்பொருள்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது.  அதற்கு மூளையாக செயல்பட்டவர் தமிழக முதல்வரின் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர்தான்.  சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது. 

vanathi srinivasan
சர்வதேச நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தி கோடிக்கணக்கில் கல்லாக்கட்டி வந்த கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போலீசில் கைதாகி உள்ளார். இளைஞர்களின் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் இந்த போதை பொருவளை விற்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் சுற்றி திரிந்தவர் தான் இந்த ஜாபர் சாதிக்.
சற்று முன் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிராமம் அடுத்த கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் ஹஷிஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் சுமார் ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹஷிஷ் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்பிலான 876 கிலோ கஞ்சா சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. சொல்வது ஒன்னு.. செய்வது ஒன்னு என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளளது திமுக அரசு.   இனியாவது தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்காமல் விழித்து கொண்டால் பல்லாயிரக்கணக்கான வாழ்க்கை காப்பாற்றப்படும்.இனியாவது தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.